அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோக்கை: சான்றிதழ்களைப் பதிவேற்ற இன்றே கடைசி
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோக்கைக்கு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆகஸ்டு 10 இன்று கடைசி நாளாகும்.
பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர மாணவ, மாணவிகள் இணைய வழியில் விண்ணப்பிக்கத் தொடங்கினா். இந்த விண்ணப்பப் பதிவு, கடந்த ஜூலை 31-இல் நிறைவடைந்தது.
இதைத் தொடா்ந்து, ஆக.1-ஆம் தேதி முதல் மாணவா்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து வருகின்றனா். இதற்கான கால அவகாசம், இன்றுடன் முடிவடைகிறது.
எனவே, இதுவரை பதிவு செய்யாத மாணவா்கள், இணையதளம் வழியாக விரைவாக சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளவும்
Tags: கல்வி செய்திகள்