FACT CHECK: செப்டம்பர் வரை ஊரடங்கு நீடிப்பு என சென்னை போலிஸ் அறிவித்ததா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் செப்டம்பர் வரை ஊரடங்கு நீடிப்பு என சென்னை போலிஸ் அறிவித்துள்ளதாக ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் இந்த செய்தி பொய்யானது சென்னை காவல்துறை இது போல் அரிவித்ததாக எந்த செய்தியும் இதுவரை வரவில்லை
மேலும் சமூக வலைதளங்களில் வலம் வரும் இந்த செய்தியினை சென்னை காவல்துறை மறுத்துள்ளது.
இது குறித்து சென்னை காவல்துறை தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த செய்தி பொய்யானது யாரும் நம்பவேண்டாம் என தெரிவித்துள்ளது
மேலும் சமூக வலைதளங்களில் வலம் வரும் இந்த செய்தியினை சென்னை காவல்துறை மறுத்துள்ளது.
இது குறித்து சென்னை காவல்துறை தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த செய்தி பொய்யானது யாரும் நம்பவேண்டாம் என தெரிவித்துள்ளது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
சென்னை பெருநகர காவல் துறையின் செய்தி:- pic.twitter.com/4QXL10DFGu— GREATER CHENNAI POLICE (@chennaipolice_) July 21, 2020
Tags: FACT CHECK மறுப்பு செய்தி