Breaking News

சமூக வலைதளங்களில் மத ரீதியான அவதூறுகளை தடுக்கக்கோரி வழக்கு...! மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0
மதநல்லிணக்கத்தை சிதைக்கும் வகையிலான வீடியோக்களை  சமூக ஊடகங்களில் பதிவிட தடை விதிக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் 3 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் வகையில் சமீபத்தில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் வீடியோ ஒன்றை வெளியிடப்பட்டது இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சேனல் நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை தடுக்கக்கோரி சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். 

அவர் தனது மனுவில், மதரீதியான அவதூறுகளை தடுக்க தவறிய யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனுவிற்கு மத்திய அரசு 3 வாரங்களில் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டது.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback