கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்
அட்மின் மீடியா
0
கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண்டைந்தார்.
*கறுப்பர் கூட்டம் என்ற யூடிப் சேனலில் இந்து மத நம்பிக்கையை புண் படுத்தும் விதமாக கந்த சஷ்டியினை ஆபாசமாக வீடியோ வெளியிட்டுள்ளார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.*
இதனால் பல்வேறு தரப்பினர் புகார் அளித்திருந்தார்கள் அந்த புகார் மீது இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 153, 153(A)(1)(a), 295(P), 505 (1)(b) and 505(2) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு,மத்தியகுற்றப்பிரிவு போலீசாரால் விசாரணை மேகொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, சுரேந்திரன் நடராஜன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலின் செயற்பாட்டாளர் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்தியகுற்றப்பிரிவு போலீசார் நேற்று வேளச்சேரியில் கைது செய்தனர்.
கந்த சஷ்டி குறித்த வீடியோவை பதிவேற்றம் செய்ததற்காக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அதன் முக்கிய நிர்வாகியாகிய சுரேந்திரன் என்பவர் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்
மேலும் சரணடைந்த சுரேந்திரனை தமிழகம் அழைத்துவர புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர் தமிழக காவல்துறை
Tags: தமிழக செய்திகள்