Breaking News

ஆக. 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் பட்டா மாறும்!

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது 
வீடு, மனை, நிலங்களை வாங்கினால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அவை பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. 

அதன் பின்னர் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு வாங்கியவர் விண்ணப்பிக்க வேண்டும் அதன் பின்னர்  பட்டா வழங்கப்படும் இதுவே இப்போது உள்ள நடைமுறை.

இனி சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது
ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடும்.

இந்த முறை சோதனை அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் தாலுகாவில் கடந்த 17ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டாமாறுதல் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback