Breaking News

BREAKING : 11,12 ஆம் வகுப்புகளில் பழைய பாடத்திட்டமே தொடரும் - என பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0


11,12ம் வகுப்பு பாடத்தொகுப்பு முறைகளில் மாற்றம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில்  மேல்நிலைக்கல்வியில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்துவதற்கான ஆணை ரத்து செய்யப்பட்டு பழைய நடைமுறையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



முன்னதாக நடைமுறையிலுள்ள 4 முதன்மை படத்தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகளுடன் கூடிய 3 முதன்மை படத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி ,மாணவர்கள் 3 முதன்மை படத்தொகுப்பினையோ அல்லது 4 படத்தொகுப்பினையோ தேர்வு செய்து கொள்ளும் வகையில் 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் இதனை நடைமுறைப்படுத்த ஆணை வெளியிடப்பட்டது.
ஆனால் இதற்கு பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


எனவே புதிய முறை ரத்து செய்யப்படுகிறது. 2020 - 21ஆம் கல்வியாண்டில் இருந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback