Breaking News

FACT CHECK: பகத் சிங்கின் சகோதரி இறந்துவிட்டார் என பரவும் பொய்யான செய்தி????

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  சுதந்திரத்திற்கு உயிர் நீத்த பகத் சிங்கின் சகோதரி பிரகாஷ் கயுர் 30-5-2020 இயற்கை எய்தினார். துரதிர்ஷ்டவசமாக இந்த தேசிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் மரணம் குறித்து செய்தி சேனல்கள் மூச்சு விடவில்லை என்று  ஒரு செய்தியுடன் ஒரு புகைபடத்தையும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் புகைபடத்தில் உள்ளவர் மாவீரன் பகத் சிங் அவர்களின் இளைய சகோதரி பர்காஷ் கவுர் தான் 

அவர் கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் ரூபிந்தர் சிங் மல்கியுடன் வசித்து வந்தார்

இந்நிலையில் பகத்சிங்கின் 107 வது பிறந்த நாளான  28.09.2014 அன்று கனடாவில் மரணமடைந்ததாக செய்திகள் ஆதார்பூர்வமாக வெளியிடபட்டன

ஆனால் சிலர் பகத்சிங் அவர்களின் சகோதரி  தற்போது இற்ந்தார் போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK

Give Us Your Feedback