FACT CHECK: 10ம் வகுப்பில் வெற்றி பெற்ற 82 வயது முதியவர். என்ற செய்தி உண்மையா?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் தெலங்கானாவில் முகமது பரக்கத் அலி என்ற 82 வயது முதியவர் ஒருவர் 47 ஆண்டுகளாக தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து வந்த நிலையில், அரசு ஆல் பாஸ் என்று அறிவித்ததால் வெற்றி பெற்றுள்ளார் என ஒரு செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அவர் 10ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று கடந்த 47 ஆண்டுகளாக தொடர்ந்து தேர்வு எழுதி வருகின்றார் என்பது உண்மை தான் ஆனால்
அந்த வயதான முதியவர் பெயர் சிவ் சரண் யாதவ்.
அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
மேலும் ராஜஸ்தானில் 10 ம் வகுப்பு ஆல் பாஸ் என இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது
மேலும் சமூக வலைதளங்களில் அவர் தெலுங்கானாவை சேர்ந்தவர் என்வும் அவர் பெயர் முகமது பரக்கத் அலி.எனவும் பொய்யாக பரப்பி வருகின்றார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி