மதுரை-விழுப்புரம் சிறப்பு ரயிலில் நேரம் இன்று முதல் மாற்றம்.
அட்மின் மீடியா
0
மதுரை- விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயிலின் புறப்படும் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் இயக்கப்படும் மதுரை- விழுப்புரம் சிறப்பு ரெயிலின் நேரங்கள் இன்று முதல் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக
மதுரை- விழுப்புரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், மதுரையில் இருந்து தினமும் 7 மணிக்குப் புறப்பட்டு, பகல் 12.05 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்,
பின்னர் விழுப்புரத்தில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு மதுரை வந்தடையும்.
தற்போது
13.06.2020 இன்று முதல் மதுரையில் இருந்து தினமும் காலை 8 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, பிற்பகல் 1.05 மணிக்கு விழுப்புரத்தை வந்தைடையும்
பின்னர் விழுப்புரத்தில் இருந்து தினமும் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மதுரையை சென்றடையும் என தெற்கு ரயில்வேதெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்