சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கா? சிறப்பு அதிகாரி விளக்கம்
அட்மின் மீடியா
0
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரானா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு ஜூன் 30 வரை நீடிக்கபட்டுள்ளது . அதில் 5 ம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம் போன்றவைகளுக்கான தடையை நீக்கவில்லை.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.
இதுதொடர்பாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அதில், சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி என ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்
Tags: FACT CHECK தமிழக செய்திகள்