மக்காவில் மூடப்பட்டிருந்த அனைத்து மசூதிகளும் நாளை முதல் திறக்கப்படுவதாக அறிவிப்பு..!!
அட்மின் மீடியா
0
மக்காவில் மூடப்பட்டிருந்த அனைத்து மசூதிகளும் மீண்டும் நாளை முதல் திறக்கப்படுவதாக அறிவிப்பு
சவூதி அரேபியாவில் கொரானா வைரஸ் பரவலை தடுக்க அந்நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது அப்போது அனைத்து மசூதிகளும் மூடப்பட்டன.
அதன் பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அந்நாட்டில் உள்ள மசூதிகள் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், மக்கா நகரில் மட்டும அங்குள்ள மசூதிகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மக்காவில் உள்ள இஸ்லாமிய விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மக்காவில் உள்ள அனைத்து மசூதிகளும் மீண்டும் திறப்பதற்கு தயாராகி வருவதாகவும், தற்போது கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் தொழுகைக்கு வருபவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே சொந்தமாக தொழுகை விரிப்புகளை கொண்டு வர வேண்டும் என்றும் தொழுகையின் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
source: gulf news Saudigazette
Tags: வெளிநாட்டு செய்திகள்