Breaking News

இந்த ஆண்டு ஹஜ் யாத்ரைக்கு அனுமதி: சவுதி அதிகாரபூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0
சவூதி அரேபியாவில் உள்ள ஹஜ் மற்றும் உம்ராவிற்கான அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் இந்த வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு அந்நாட்டில் இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.



ஒவ்வொரு வருடமும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் சவூதி அரேபியாவிற்கு ஹஜ் என்னும் புனித பயணம் மேற்கொள்வது வழமையாக நடக்கும் நிகழ்வாகும்.

தற்பொழுது இருக்கும் கொரானா பாதிப்பினால்  சர்வதேச விமான போக்குவரத்து சேவைகள் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. 

இதனால் சவுதியில் உம்ரா எனும் புனித பயணம் மேற்கொள்வதற்கும் சர்வதேச தரை, கடல் மற்றும் விமான போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக, வெளிநாடுகளில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக சவூதி அரேபியாவிற்கு வருவது சந்தேகமாக இருந்த நிலையில் சவுதி அரசாங்கம் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், கூட்டமான இடங்கள் மற்றும் மக்கள் பெரிதளவு ஒன்று கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் இந்த வருடத்திற்கான “ஹஜ்” மேற்கொள்ள மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. 

மேலும், தற்பொழுது சவூதி அரேபியாவில் இருக்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கே ஹஜ் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவிற்கான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தேவையான சமூக இடைவெளி, பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் போன்றவற்றையும் கருத்தில் கொண்டு, ஹஜ் பாதுகாப்பான முறையில் செய்யப்படுவதை உறுதி செய்யும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback