வாகன ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் வரை அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
ஓட்டுநர் உரிமம் ,பர்மிட்,மோட்டார் வாகன் பதிவு உள்ளிட்ட மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்க முடியாதவர்களுக்கான காலக்கெடு, செப்டம்பர் 30 வரை நீட்டித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கின் போது பலரின் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கும் தேதி முடிவடைந்ததுள்ளது.
இந்நிலையில், ஓட்டுனர் உரிமம், அனைத்து வித பர்மிட்டுகள், வாகன பதிவு உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகன ஆவணங்களின் புதுப்பிப்பு காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
காலாவதியான ஓட்டுநர் உரிமங்கள் அல்லது பிற போக்குவரத்து ஆவணங்களின் செல்லுபடியை மத்திய அரசு நீட்டிப்பது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக இதற்கான கால அவகாசம் ஜூலை 31 வரை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம், மேலும் இரண்டு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்