Breaking News

மின்சார கட்டணம் எவ்வாறு கணக்கீடு செய்யப்படும் : மின்சார வாரியம் விளக்கம்

அட்மின் மீடியா
1
மின் வாரியம்இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, வழக்கமான நடைமுறை கணக்கெடுப்பு முறையில்தான் மின்சார யூனிட் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது என மின் வாரியம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்தை உள்ளடக்கிய தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.


தற்போது நிலவிவரும் கரோனா வைரஸ் பாதிப்பினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மின் நுகர்வோர் மற்றும் ஊழியரின் பாதுகாப்பு காரணம் கருதி, மின் கணக்கெடுப்பு எடுக்க முடியாத நிலையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மின் கணக்கீடு செய்யப்படாமல் முந்தைய மாதம் மின்நுகர்வோர் செலுத்திய தொகையை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 


இவ்வாறு வசூல் செய்யப்படும் தொகை அடுத்து வரும் மாத கணக்கெடுப்புத் தொகையில் சரிசெய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


ஆனால் ஊரடங்கு கால கட்டத்தில் வீட்டு மின்நுகர்வு அதிகரித்துள்ளதால் மின் கணக்கெடுப்பு நடத்தும் பொழுது அதிக கட்டணம் வரும் நிலையில் மின்வாரியம் முந்தைய மாத கட்டணத்தை மட்டுமே கழித்து யூனிட்டை கழிப்பதில்லை என்று ஊடகங்களில் வரும் செய்தி தவறானதாகும்.


இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, வழக்கமான நடைமுறை கணக்கெடுப்பு முறையில்தான் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.


ஆகவே மின்சார வாரியத்தால் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் பொழுது, நான்கு மாத மின் நுகர்வு இரு இரண்டு மாத மின் நுகர்வாக பிரிக்கப்பட்டு அதற்கான வீதப்பட்டியலில் (Tariff Slab) மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, முந்தைய மாத கட்டணம் கழிக்கப்பட்டபின் மின் கட்டண தொகை கணக்கிடப்படுகிறது.


இதை கருத்தில் கொள்ளாமல், முந்தைய மாத யூனிட்டை கழிக்காமல் தொகையை மட்டுமே கழிக்கப்படுகிறது என்ற செய்தி தவறானதாகும். 


பொதுமக்கள் தங்களது கணக்கீட்டு முறையில் சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை அணுகி தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மற்றும் கணக்கீடு செய்யப்படும் முறை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் http://www.tangedco.gov.in/linkpdf/pmccalculation(652020).pdf என்ற இணையதளத்திலும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback

1 Comments

  1. 4 மாதத்திற்கு சேர்த்து 998 யூனிட்ஸ் வந்தால் பிரட்சனை இல்லை. இரண்டாக பிரிக்கும் போது 499 யூனிட் கணக்கிடப்படும். Tariff slab rate மாறாது. எனவே பிரேட்சனை இல்லை. 1000 யூனிட்டுக்கு மேல் வந்தால், tariff slab rate மாறிவிடும். உண்மையாகவே, முதல் இரண்டு மாத பயன் பாட்டு அளவு குறைவாகவும் (குளிர் காலமும் வெயில் காலமும் கலந்த ஒரு பீரியட். அது மட்டும் அல்லாமல், முற்றிலுமாக வீட்டிலேயே இல்லாதிருந்த காலம்), அடுத்த இரண்டு மாத பயன் பாட்டு அளவு மிக அதிகமாகவும் (முற்றிலுமாக அக்னி உடன் கூடிய வெயில் காலம் - மற்றும் முழுவதுமாக வீட்டிலேயே இருந்த ஒரு பீரியட்) பயன் பட்டிருக்கும்.

    எனவே முதல் இரண்டு மாத பீரியட்கு 499 யூனிட்டுக்கு உள்ள tariff slab rate படியும்; அடுத்த இரண்டு மாத பீரியட்கு 500 யூனிட் tariff slab rate படியும் கணக்கீடு செய்தால் சரியாக இருக்கும்.

    அல்லது, முதல் இரண்டு மாத பீரியட் கு assessed யூனிட் கணக்கின் படியும், அடுத்த இரண்டு மாத பீரியட் கு, assessed யூனிட் ஐ கழித்து மீதி உள்ள யூனிட்டை கணக்கிலெடுத்தும் tariff slab rate apply பண்ணினால், சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

    ReplyDelete