தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
கொரானா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன ஆனால் மாணவ மாணவிகளின் எதிர்கால நன்மை கருதி பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன
இந்நிலையில் ஆனலைன் வகுப்பின் போது ஆபாச விளம்பரங்கள் வருவதாகக் கூறி சரண்யா என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தமிழகத்தில் மாநில அரசு சார்பில் பிரத்யேக கல்வி சேனல் நடத்தப்படுகிறது என்று தமிழக அரசு வழக்குரைஞர் கூறினார், எனவே பாதுகாப்பான ஆன்லைன் கல்வியை வழங்க என்னென்ன வழிமுறைகள் உள்ளது என்பது குறித்து ஜூன் 20-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், கரோனா தொற்றால் அனைத்துமே ஆன்லைன் முறையில் உள்ளதால், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
Tags: தமிழக செய்திகள்