Breaking News

லடாக் எல்லையில் நடந்தது என்ன? இந்திய ராணுவம் விளக்கம்

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாகவே இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் எல்லை பிரச்சனை காரணமாக போர் பதற்றம் இருந்தது என்பதும் இரு நாட்டு ராணுவ வீரர்களும் எல்லையில் குவிக்கப்பட்டனர் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே



இப்பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்துஇதன்படி, இருநாடுகளுக்கு இடையே தூதரக ரீதியான பேச்சுவார்த்தை நடந்தது.  எல்லை பிரச்னைகளை பேசித் தீர்க்க முடிவு செய்யப்பட்டதையடுத்து சீன படைகள் இந்திய எல்லையில் இருந்து திரும்ப தொடங்கின.

அப்போது லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா படைகளை திரும்பிக் கொண்டிருந்தபோது இரு நாட்டு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எதற்காக? எப்படி? மோதல் ஏற்பட்டது என்பது தெரியவில்லை.

சீன ராணுவத்தினர் கல் மற்றும் கட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவத்தின் மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.


லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படை வெளியேறும் போது, வன்முறை ஏற்பட்டது என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. வன்முறையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


1975 ஆம் ஆண்டுக்கு பின்னர் 45 ஆண்டுகளுக்குப் பின் நடந்த இந்த மோதலில் இந்திய தரப்பில் 3 வீரர்கள்  இறந்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback