Breaking News

வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட போராட்டகாரர்கள்: பதட்டம் நீடிப்பு

அட்மின் மீடியா
0
மினிசொட்டா மாகாணத்திலுள்ள மினியாபொலிஸ் நகரில் காவல்துறையினரால் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து அவரது மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டங்களால் அமெரிக்கா சற்றே அதிர்ந்து தான் போயுள்ளது

அமெரிக்காவில்  போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றது மேலும்  அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.


ேலும் அனெரிக்காவில்  உள்ள  பல மாகாணங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் இதனைக் கட்டுப்படுத்தமுடியாமல்  போலீஸார் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வாஷிங்டனில் உள்ள  வெள்ளைமாளிகைஅருகில் பல இடங்களில் போராட்டக்காரர்கள் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதால், பாதுகாப்பு நடவடிக்கைக்களுக்காக வெள்ளைமாளிகை விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன.


மேலும், அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி போலீஸார் கலைக்க முயன்றனர்

அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தியதால் அதிபர் டொனால்ட் டிரம்ப், மறைத்துவைக்கப்பட்டதாக அமெரிக்க நாளிதழான நியு யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback