மதுரையில் முழு ஊரடங்கு அதிகார பூர்வ அறிவிப்பு: என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது
அட்மின் மீடியா
0
கொரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை இரவு 12 மணி முதல் வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை 7 நாட்களுக்கு மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு.
எவை இயங்கும்
மருத்துவமனை தொடர்பான பணிகள், ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு அனுமதி.
விமான நிலையம், ரயில் நிலையங்களுக்கு சென்று திரும்பும் ப்ரீபெய்டு ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி.
மத்திய, மாநில அரசு அலுவலங்கங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்.
வங்கிகள் 33 சதவீத ஊழியர்களுடன் ஜூன் 29 மற்றும் 30 தேதிகளில் செயல்படலாம்.
மளிகைக் கடை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியவாசிய கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.
ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே மக்கள் பயணித்து அத்தியவாசிய பொருட்களை வாங்க வேண்டும்.
உணவங்களில் காலை 6 மணி முதல் 8 மணி வரை பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும்.
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்
தன்னர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் அரசு அனுமதி பெற்றே மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு அனுமதி. நீதிமன்றம் செயல்படலாம்.அத்தியவாசிய பொருட்களுக்கான வாகன சேவைக்கு அனுமதி
இ-பாஸ் கட்டாயம். திருமணம், இறப்பு, மருத்துவ அவசரத்திற்கு மட்டுமே வழங்கபடும்
எவை இயங்காது
ஆட்டோ, கால்டாக்சி மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
டீ கடைகளுக்கு அனுமதி இல்லை.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்கள் வீட்டைவிட்டு வெளியேற கட்டுபாடு
மதுரையில் முழு ஊரடங்கு
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) June 22, 2020
மதுரை மாநகராட்சி, பரவை நகராட்சி, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் #Covid_19 அதிகரிப்பு.
தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாளை இரவு 12 மணி முதல் வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு.#Madurai #lockdown pic.twitter.com/q7j2bXAACR
Tags: தமிழக செய்திகள்