Breaking News

பாகிஸ்தான் தலைநகரில் முதல் இந்து கோவில்: கிருஷ்னர் கோவில் கட்டுமான 10 கோடி செலவை ஏற்ற பாகிஸ்தான் அரசு

அட்மின் மீடியா
0
இஸ்லாமாபாத்தின் முதல் இந்து கோயில்: ரூ.10 கோடி செலவை ஏற்ற பாகிஸ்தான் அரசு!



பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்  இந்து மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. ஆனால் அங்கு அவர்கள் வழிபடுவதற்கு என்று முறையாக இந்து கோயில்களோ, இறுதி சடங்குகளை நடத்த தகன மேடைகளோ இதுவரை இல்லை. அங்கு  உள்ள இந்துக்கள்  வழிபடுவதற்கு வேறு பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்று வந்தனர். தங்களுக்கென ஒரு கோயிலை அமைத்துக்கொள்ள அவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு கோயில் கட்டிக்கொள்ள 2000 சதுர அடி நிலம் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் அரசு ஒதுக்கியது.

இஸ்லாமாபாத்தின் எச்-9 பகுதியில் 20,000 சதுர அடியில் கிருஷ்ணர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த கிருஷ்னர் கோவில் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோயில் ஆகும் .இந்த கோயிலுக்கு ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் என பெயர் வைத்துள்ளது. இந்த விழாவில் பாகிஸ்தான் நாடாளுமன்ற செயலாளர் லால்  மல்ஹி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார் அப்போது அவர் 

இந்த கோயிலைக் கட்டும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது பிரதமர் இம்ரான் கானின் ஒப்புதலுடன் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டதாகவும் கோயிலின் கட்டுமானம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயுடன் தொடங்கப்பட்டுள்ளது மேலும் கோயில் கட்ட ஒதுக்கப்பட்டுள்ள இடத்தின் அருகிலேயே, எரியூட்டும் மயானமும் அமைக்கவிருக்கின்றனர் அவர் கூறினார். 


Source: Gulf News 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback