பசுவை கொன்றால் 10 ஆண்டுகள் சிறை! - ஆதித்யநாத்தின் அவசர சட்டம்!
அட்மின் மீடியா
0
உத்தர பிரதேசத்தில் பசுக்களை கொல்வதை தடுக்க அம்மாநில சட்டமன்றம் அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இப்போது உத்தர பிரதேசத்தில் பசுக்களை கொல்வதை தடுக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உத்தரபிரதேசத்தில் பசுக்களை கொள்பவர்களுக்கு ஒரு ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் அனுமதியின்றி வண்டிகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்பவர்களது வாகன உரிமை மற்றும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்