1 ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை கர்நாடகாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை!
அட்மின் மீடியா
0
கொரானா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும், மூடப்பட்டுள்ள நிலையில் பல தனியார் பள்ளிகள் ஆன்லைனில், பாடங்களை நடத்த தொடங்கி விட்டன.
இந்நிலையில் கர்நாடகாவில் எல்கேஜி முதல் 7ஆம் வகுப்பு வரை, ஆன்லைனில் பாடங்களை நடத்த தடை விதித்து, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம், பாடங்களை நடத்த தடையில்லை,
என்றும் கர்நாடகா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார்
தெரிவித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்