Breaking News

மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு : தமிழக அரசு

அட்மின் மீடியா
0
மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். 


கொரானா ஊரடங்கால் வாகன போக்குவரத்து அடியோடு முடங்கி உள்ளது. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தவிர வேறு விததமாக வாகனங்களின் போக்குவரத்து முடங்கி உள்ளது.


இதனால் ஏப்ரல் 10ம் தேதிவரை மோட்டார் வாகன வரி செலுத்த அவகாசம் அளிக்கபட்ட நிலையில் தற்போது மோட்டார் வாகன வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 30 ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். 


இதன்படி அனைத்து வாகனங்களுக்கான ஆண்டு வரி மற்றும் காலாண்டு வரி உள்ளிட்டவைகளை அபராதம் இன்றி ஜூன் 30 ம் தேதிவரையில் அபராதமின்றி செலுத்தலாம். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback