தமிழகத்தில் பிறை தென்படவில்லை: திங்கட்கிழமை ஈத் பெருநாள் : ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் பிறை தேட வேண்டிய நாளான இன்று எங்கும் பிறை தெரியாத காரணத்தினால்
ரமலான் மாதத்தின் நோன்பை முப்பதாக பூர்த்தி செய்து இன்ஷா அல்லாஹ் திங்கட்கிழமை 25.05.2020 அன்று பெருநாள் கொண்டாடப்படும்
ஷவ்வால் மாதத்திற்கான பிறை எங்கும் காணப்படவில்லை ஆகையால் ஈத் உல் பித்ர் என்னும் ஈகைப் பெருநாள் தொழுகை மே 25 திங்கள்கிழமை (1 ஷவ்வால் 1441) அன்று அனுசரிக்கப்படும் என்று ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு
இந்த ஆண்டு கொரானா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் பெருநாள் தொழுகை, அவரவர் வீடுகளிலேயே மேற்கொள்ள வேண்டும் என்றும் யாரும் விதிமுறைகளை மீற வேண்டாம் என்றும் ஜமா அத்துல் உலமா செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே நாம் அனைவரும் இந்த ரமழானை சமூக விலகலை கடைபிடித்து இந்த கொரோனா வைரஸ் நோயிலிருந்து உலக மக்கள் அனைவரும் பாதுகாப்பு பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.
Tags: மார்க்க செய்தி