மும்பையில் கொரானா வார்டில் சடலங்களுக்கு மத்தியில் நோயாளிகளுக்கு சிகிச்சை:வீடியோ இனைப்பு
அட்மின் மீடியா
0
மும்பை மும்பை அருகே உள்ள சியோன் பகுதியில் இருக்கும் லோக்மான்யா திலக் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு அருகில் சில சடலங்கள் படுக்கைகளில் கேட்பாரின்றி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது அந்த தனி வார்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அருகில் இருக்கும் படுக்கைகளில் சில சடலங்கள் கிடக்கும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவை சட்டமன்ற உறுப்பினர் நிதேஷ் ரானே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
In Sion hospital..patients r sleeping next to dead bodies!!!
This is the extreme..what kind of administration is this!
Very very shameful!! @mybmc pic.twitter.com/NZmuiUMfSW
இதுகுறித்து மருத்துவமனை டீன் டாக்டர் பிரமோத் இங்களே கூறுகையில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் உடல்களை பெற அவர்களது குடும்பத்தினர் தயக்கம் காட்டுகின்றனர். மேலும் பிணவறையில் மொத்தம் 15 பிரிவுகள் மட்டுமே உள்ளன. அதில் 11ல் ஏற்கனவே சடலங்கள் உள்ளன. அனைத்து சடலங்களையும் பிணவறைக்கு மாற்றினால் கோவிட்-19 ஆல் இறக்காதவர்களின் சடலத்துக்கும் பிரச்சனை ஏற்படும் அதனால் தான் சடலங்கள் அங்கு இருந்தது. அந்த சடலங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.