Unlock 1.0 : முழுவிவரம்.....நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஜூன் 30-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிப்பு!
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக புதிய தளர்வுகளுடன் ஐந்தாம் கட்டமாக பொது
ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய இன்று Unlock 1.0 அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட தளர்வுகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும்
நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நீட்டித்தும், மற்ற பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கின் போது அவசர அத்தியவாசிய தேவைகளை தவிர இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது.
முதல்கட்ட தளர்வுகள்:
ஜூன் 8 முதல் ஹோட்டல்கள், ஷாப்பிங்மால்கள் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதிக்கப்படும்
இரண்டாம் கட்ட தளர்வு
ஜூலை மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்.
மூன்றாம் கட்ட தளர்வுகள்
மூன்றாம் கட்ட தளர்வில் சினிமா, பொழுதுபோக்கு பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள், மெட்ரோ ரயில்கள், நீச்சல் குளங்கள் ஆகியன திறப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 வரை எந்த தளர்வுகளும் கிடையாது.
அதேசமயம் பொதுஇடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆகும்
முக்கிய குறிப்பு:
இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை வரை பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான தனிநபர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எந்தத்தடையும் கிடையாது. இதற்காக இ-பாஸ் பெற தேவையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு