ஊரடங்கு தளர்வு: சவுதி அரேபியாவில் ஜூன் 21 க்கு பிறகு ஊரடங்கு இல்லை : சவுதி அதிகாரபூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சவுதி அரேபியாவில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் 21-ஆம் தேதி மொத்தமாக விளக்கி கொள்ளபட உள்ளது
சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் காரணமாக விதித்துள்ள சில கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா
வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 2 மாதங்களாக,
சவுதி அரேபியாவில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்து வந்த நிலையில்
வரும் வாரங்களில், தளர்வு செய்ய முடிவெடுத்துள்ளது.
ஜூன் 21 முதல் நாட்டில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுவதுமாக
முடிவடையும். இந்த கட்டுப்பாடுகள் மூன்று கட்டங்களாக நீக்கப்படும் என தெரிவித்துள்ளது.
முதல் கட்டம் வியாழக்கிழமை (மே
28) தொடங்கி மே 30 ஆம் தேதியுடன் முடிவடையும்
முதற்கட்ட 28 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை தளர்வாக வரும்
வியாழக்கிழமை முதல் நாடெங்கிலும் அறிவிக்கப்பட்ட 24 மணிநேர ஊரடங்கு
கட்டுப்பாடு, மதியம் 3 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை
குறைக்கப்பட்டுள்ளது.
தனியார்
கார்களுக்கு அனைத்து பகுதிகளுக்குள்ளும் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை
அனுமதிக்கப்படும். மக்காவை தவிர. சில்லறை மற்றும் மொத்த கடைகள் மற்றும்
மால்களில் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும், ஆனால்
அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள், விளையாட்டுக் கிளப்கள், சுகாதார
கிளப்புகள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் சினிமா திரையரங்குகள் விலகல்கள்
காரணமாக தொடர்ந்து மூடப்படும்.
இரண்டாம் கட்டம் மே 31 ஆம் தேதி தொடங்கி ஜூன் 20 ஆம் தேதியுடன் முடிவடையும் காலை
6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இந்நேரத்தில் சில்லரை மற்றும் மொத்த வணிக கடைகள்,
வணிக மையங்கள் மற்றும் மால்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்காவைத் தவிர,
நாட்டின் அனைத்து பகுதிகளிலும். மக்கா தவிர்த்து நாடு முழுவதும் உள்ள
அனைத்து மசூதிகளிலும் வெள்ளிக்கிழமை தொழுகை உட்பட அனைத்து சபை
பிரார்த்தனைகளும் மீண்டும் தொடங்கும்.
மூன்றாம் கட்டமாக ஜூன் 21 முதல்
கொரானாவிற்க்கு முன்பு எப்படி இருந்ததோ அதே போல் சவுதி நாடு செயல்படும் என தெரிவிக்கபட்டுள்லது மேலும் மெக்காவிலும் தொழுகைகளுக்கு அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING: #SaudiArabia will return to "normal" conditions, as the Kingdom was before #coronavirus curfew measures was imposed, starting from June 21 pic.twitter.com/N2MQA7WlpX
— Saudi Gazette (@Saudi_Gazette) May 26, 2020