மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 14 பேர் மீது குண்டாஸ்
அட்மின் மீடியா
0
சென்னையை சேர்ந்த மருத்துவர் சைமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் அவரது உடல் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய்ப்பட இருந்தது ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்
பின்னர் வேலங்காடு மயான பூமிக்கு கொண்டு சென்றனர். அப்பகுதியை சுற்றி இருப்பவர்களும் போராட்டம் நடத்தி கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் மருத்துவரின் உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் மீதும் ஓட்டுநர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இதனையடுத்து கொரோனவால் மரணித்தோர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்போருக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது அதேபோல் மாநில அரசும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்தைக் கொண்டு வந்தது.
இதையடுத்து மருத்துவரின் உடல் வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 14 நபர்கள் கைது செய்யபட்டுள்ளார்கள் இந்நிலையில், இந்த விவகாரத்தில் கைதான 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது
Tags: முக்கிய அறிவிப்பு