நிலத்தை விற்று ஏழைகளுக்கு உதவி செய்யும் சகோதரர்கள்; கண்கலங்க வைக்கும் மனித நேயம்
அட்மின் மீடியா
0
கொரானா பரவலை கட்டுபடுத்த கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைபடுத்தபட்டது இந்நிலையில் கர்நாடகா மாநிலம் கோலாரை சேர்ந்த தாஜ்முல் பாஷா, மற்றும் முஜம்மில் பாஷா இருவரும் சகோதரர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஏழை எளியவர்கள் தங்கள் அன்றாட உணவை கூட பெற முடியாமல் தவித்து வருவதை பார்த்து தங்களால் ஆன உதவி செய்து வந்தார்கள்
தங்களிடம் உள்ள கையிருப்பு பணம் காலி ஆனவுடன் என்ன செய்வது என யோசித்த சகோதரர்கள் தங்களிடம் இருக்கும் நிலத்தை விற்றுவிடலாம் என முடிவு செய்து அந்த நிலத்தை 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
அந்த பணத்தை கொண்டு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வாங்கியுள்ளனர்.பின்னர் காவல் துறையினரின் அனுமதியுடன் தங்கள் நண்பர்களைக் கொண்டு சுமார் 3000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வீடு வீடாக சென்று கொடுத்துள்ளனர்.
மேலும் அவர்களின் வீட்டின் அருகே தற்காலிக டெண்ட் அமைத்து அங்கேயே சமைத்து நாள்தோறும் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்:
அரசு ஊரடங்கை எப்போது தளர்த்தும் என்று தெரியவில்லை. ஆனால் கடவுள் எங்களுக்கு கொடுத்துள்ளவைகளை வைத்து தங்களால் முயன்ற உதவிகளை ஏழைகளுக்கு நிச்சயம் செய்வோம் இஸ்லாம் எங்களுக்கு தனது அண்டை வீட்டார் வறுமையிலும் சிரமத்திலும் இருக்கும் நிலையில் தான் மட்டும் வளமையும், வசதியுமாக ஆடம்பரத்துடன் இருப்பதை உண்மையான முஸ்லீம் விரும்பமாட்டான் என்று கூறியுள்ளது ஆகையால் அவர்களுக்கு எங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றோம் என அடக்கத்துடன் கூறுகின்றார்
Tags: மார்க்க செய்தி