Breaking News

பிபிசி ஒளிபரப்பிய முகமது நபிஸல் வரலாறு : உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
வரலாற்றில் முதன் முறையாக லண்டன்   B B C நாளை வெள்ளி கிழமையில் இருந்து இஸ்லாமிய மார்க்கம் மற்றும் முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் போதனைகளை தொடர்ந்து ஒளிபரப்பு செய்ய உள்ளது.  



இதற்கு முன்பாக இது போன்ற ஒரு நிகழ்ச்சியை அந்த ரேடியோ தளம்  ஒளிபரப்பு  செய்யவில்லை.  தற்போது அதற்கான  காரணம் என்ன  என்று பலரும் அறிய முற்பட்ட சூழ்நிலையில் அதற்கான பதிலை பி பி சி  இவ்வாறு தெரிவித்து உள்ளது. 

ஆம்..... உலகம் முழுவதிலும் பரவியுள்ள இஸ்லாமிய ஃபோபியா குறித்து மக்களிடம் எழந்துள்ள  அச்சத்தை நீக்கும்  நோக்கிலேதான் இது போன்ற நிகழ்ச்சிகளை  தொடர்ந்து ஒளிபரப்பு செய்ய  B B C முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்ற ஒரு செய்தியினை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள் 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி உண்மை தான்

கொரானா வைரஸ் பரவலை தடுக்க உலகம் முழுவதும் உலகம் முழுவதும் பல நாடுகளில் சமூக பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது

அந்த வகையில் பிரிட்டனிலும் ஊரடங்கு காரணமாக பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறவில்லை , அனைவரும் வீட்டிலேயே தொழுகின்றார்கள் மேலும் ரமலான்நோன்பு ஆரம்பிக்க உள்ளதாலும் பிபிசி தனது ரேடியோவில் வாரம் தோறும் வெள்ளிகிழமை அன்று அதிகாலை 5 மணியளவில்  இமாம் களை கொண்டு இஸ்லாமிய போதனைகள் மற்றும் நபி ஸல் வரலாறு ஆகியன ஒளிபரப்ப முடிவு செய்தது 



இந்த ஒளிபரப்பு கடந்த 03.04.2020 அன்று துவங்கியுள்ளது. இது போன்று பிபிசி ஒளிபரப்பு செய்வதை பலரும் வரவேற்று உள்ளார்கள். கொரானாவால் கவலை அடைந்த பலர் இந்த செய்தியால் உற்சாகம் அடைந்துள்லார்கள் மேலும் உலகம் முழுவதும் பலர் இஸ்லாமிய கருத்துக்களை கேட்க உள்ளார்கள்.....

அட்மின் மீடியா ஆதாரம் 1

https://twitter.com/Ladhka/status/1246544356577771520

அட்மின் மீடியா ஆதாரம் 2

https://www.arabnews.com/node/1655021/world





Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback