Breaking News

தன்னார்வலர்கள் நிவாரண உதவி வழங்க தடை இல்லை, : சென்னை உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0
கொரானாவினை கட்டுபடுத்த ஊரடங்கு உத்தவு மே மாதம் 3 ம்தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது

இந்நிலையில் பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் தன்னார்வலர்கள், என பலரும் ஏழை எளிய மக்களுக்கு தங்களால் ஆன  உதவிகள் செய்து வந்தார்கள்

இந்நிலையில் திடிரென தமிழக அரசு உதவி செய்பவர்களுக்கு சில கட்டுபாடுகளை விதித்தது 

இதனை எதிர்த்து திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது அவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம். தன்னார்வலர்கள் உதவலாம் ஆனால் அவர்கள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு தன்னார்வலர்கள் நிவாரண உதவிகளை பொதுமக்களுக்கு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

மேலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அதிகாரிகளிடம் அனுமதி பெறத் தேவையில்லை 48 மணி நேரத்திற்க்கு முன்பு  தகவல் தெரிவித்தாலே போதும் என்றும் மக்களுக்கு உதவி செய்தவர்கள் நேரடியாக சென்று உணவுப் பொருட்களை வழங்கலாம். மக்களிடம் உணவுப் பொருட்களை வழங்க 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும்' என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback