மளிகை, காய்கறி கடைகள் திறந்திருக்கும் நேரம் மேலும் குறைப்பு: தமிழக அரசு அதிரடி உத்தரவு
அட்மின் மீடியா
0
நாளை 05.04.2020 முதல் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவிப்பு
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்க அரசுடன் சமூக ஆர்வலர்கள் இணைந்து செயல்பட தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். புதிய நேரக்கட்டுப்பாட்டை அனைத்து பொதுமக்களும் கடைபிடிக்க வேண்டும் எனவும் விதிகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்
தமிழக அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக மதத்தலைவர்கள் ஒப்புதல்அளித்துள்ளார்கள் மேலும் மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
மேலும் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்
கொரோனாவிற்கு மதச் சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்கவேண்டும் , கொரோனாவிற்க்கு சாதி மத பேதமின்றி அனைவரையும் தாக்கக்கூடியது என கூறினார்
Tags: முக்கிய அறிவிப்பு