போராட்டம் நடத்துபவர்களை அப்புறபடுத்த, கைது செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பு நிறுத்திவைப்பு
அட்மின் மீடியா
0
அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது செய்யலாம் என்ற உத்தரவு நிறுத்தி வைப்பு-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு கைது செய்யலாம் என்று நேற்று உத்தரவிட்ட நிலையில் இன்று நிறுத்தி வைப்பு, வழக்கு மார்ச் 11 வரை ஒத்திவைப்பு
திருப்பூரில் நடைபெற்றும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், அனுமதியின்றி போராடுபவர்களை கைது செய்யும்படி நேற்று டிஜிபிஅவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்
போராட்டக்காரர்களை கைது செய்யும் இந்த உத்தரவு தமிழகம் முழுவதற்கும் பொதுவான உத்தரவாகவே பார்க்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் நேற்று உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். கைது உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
உடனே வழக்கு நாளை ஒத்திவைக்கபட்டது
இன்று அந்த வழக்கு வந்தபோது விசாரித்த உயர்நீதிமன்றம் போராட்டக்காரர்களை கைது செய்வது தொடர்பாக பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களும் 11-ம் தேதி கேட்கப்படும் என்றும் தெரிவித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.
Tags: முக்கிய அறிவிப்பு