டெல்லி ஷாஹின்பாக் போராட்டம் ஒத்திவைப்பு
அட்மின் மீடியா
0
சிஏஏ-வை எதிர்த்து டெல்லி ஷாஹீன் பாகில் நடந்து வந்த 101 நாள் பெண்கள் போராட்டம் ஒத்திவைப்பு
கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை பிறப்பிக்கப்பட்டதால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவாமல் இருக்க கடந்த ஒரு வாராமாக இடைவெளி விட்டு சில பெண்கள் போராடி வந்தனர்.
டெல்லியில் ஊரடங்கு அமலில் இருப்பதால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.
இதனையடுத்து, அவர்களை டெல்லி போலீசார் அப்புறப்படுத்தினர்.