Breaking News

21 நாட்களுக்கு ஊரடங்கு மத்திய அரசு அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0


நாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு. பிரதமர் மோடி அறிவிப்பு.. இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது

இந்த ஊரடங்கு கட்டுபாடுகள் என்ன ? 

1. அனைத்து அத்தியாவசிய கடைகள் திறந்து இருக்கும்

2. வங்கிகள் இயங்கும்

3. அனைத்து அரசு அலுவலகங்கள் மூடல்

4.பெட்ரோல் பங்க் திறந்து இருக்கும்

5. மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு வந்த வெளிநாட்டினர் தனிமைப்படுத்தப்பட வேண்டியது கட்டாயம்  

6, டாஸ்மாக், மால், தனியார் தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மூடல்

7. ரேஷன்கடைகள் திறந்து இருக்கும்

8. மக்கள் வெளியே வர தடை

9. பிளஸ் 1 தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. 

10, சிலிண்டர் விநியோகம் செய்யலாம். 

11. ஆவின் பால் நிலையம் திறந்து இருக்கும்.

12. தொலைத்தொடர்பு, இணையதள சேவை, கேபிள் டிவி நிறுவனங்கள் செயல்படும் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் வழக்கம் போல் செயல்படும்

13, அனைத்து வழிபாட்டு தலங்கள் மூடப்படும்

13. பேருந்துகள் இயங்காது மற்றும்  வாடகை கார், ஷேர் ஆட்டோ, ஆட்டோ  ரிக்‌ஷா போன்ற தனியார் சேவைக்கு அனுமதி மறுப்பு

14.பால் பொருட்களை விற்கும் கடைகள், இறைச்சி கடைகள் ஆகியவை செயல்படும்

15. மருந்தகங்கள் திறந்து இருக்கும்

16. மரண ஊர்திக்கு தடை இல்லை

17. அம்மா உணவகங்கள் திறந்து இருக்கும்

18. அனைத்து கல்லூரி தேர்வுகளும், வேலை வாய்ப்பு போட்டித் தேர்வுகளும் தள்ளிவைப்பு

19.அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

20. பொது மக்கள் ஒருவருக்கு ஒருவர் ஒரு மீட்டர் தூரத்தில் இருப்பது அவசியம்

இந்த ஊரடங்கு ஏப்ரல் 14 ம் தேதி வரை இருக்கும்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback