Breaking News

வாட்ஸ்ஆப்பில் உள்ள ஸ்டேட்டஸ் இனி 15 நொடிகள் மட்டுமே?

அட்மின் மீடியா
0
வாட்ஸ்ஆப் செயலியில் தகவல்கள் அனுப்புவதற்கிடையே, பலரும் ஸ்டேட்டஸ் தொடர்பான வீடியோக்களை அனுப்புவது வழக்கம். 


அந்த ஸ்டேட்டஸில் அனுப்பப்படும் ஒவ்வொரு வீடியோவும் இனி 15 நொடிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 16-நொடி அல்லது அதற்கும் மேற்பட்ட வீடியோக்களை அனுப்ப முடியாது 

வாட்ஸ்ஆப்பில் இந்த ஸ்டேட்டஸ் வசதி தொடங்கப்பட்ட போது, அதில் 30 நொடிகள்  வரை வீடியோக்களை அனுப்ப அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.


கொரோனாவைத் தவிர்க்க தற்போது ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாட்ஸ்ஆப் பயனாளிகள் ஸ்டேட்டஸ் மூலம் ஏராளமான வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதனால், தங்கள் சர்வர் டிராஃபிக் 'தொங்கி'விடக் கூடாது என்பதற்காக வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்த வீடியோ நேரக் குறைப்பில் ஈடுபட்டுள்ளது.

மேலும், வாட்ஸ் ஆப் மூலம் போலி செய்திகள் எதுவும் பரவாமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback