Breaking News

வண்ணாரபேட்டையில் போராட்டத்தை தொடர்வதா..? வேண்டாமா? என பரவும் செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போராட்டம் இன்று 15வது நாளை எட்டியுள்ளது.


மேலும்  நேற்றிரவு போராட்டகாரர்களுடன் முதலமைச்சர்  பேச்சுவார்த்தை நடத்தினார் அதன்  பின்னர், செய்தியாளர்களை சந்தித்த போராட்டக்குழுவினர், போராட்டத்தை கைவிடும்படி முதலமைச்சர் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போராட்டக் களத்தில் உள்ள அனைவரிடமும் ஆலோசித்த பின்னர், போராட்டத்தை தொடர்வதா? கைவிடுவதா? என்பது குறித்து இன்று காலை அறிவிப்பதாக கூறினார்கள்.

 இதுகுறித்து போராட்டகாரர்கள் கூறியதாவது போராட்டம் சம்மந்தமாக  முதல்வரை சந்தித்து பேசினோம். அதன்பின்பு முதல்வர் கூறிய கருத்துக்களை வண்ணாரபேட்டையில் உள்ளவர்களுடன் பேசி ஆலோசனை நடத்தினோம். தமிழகத்தில் CAA,NRC, அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு அறிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என முடிவு எடுக்கபட்டுள்ளது என கூறினார்கள்.

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback