Breaking News

ஜாமியா மிலியா பல்கலை நூலகத்தில் படிக்கும் மாணவர்களை தாக்கிய போலிஸ் : வெளியான சிசிடிவி வீடியோ ஆதாரம்

அட்மின் மீடியா
0
டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது கடந்த டிசம்பர்  மாதம் ஜனவரி  15ம் தேதி போலீஸ் நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதல் குறித்த சிசிடிவி வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது



கடந்த பிப்ரவரி 15ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல ஜாமியா மிலியா மாணவர்கள் முயன்றார்கள். மாணவர்களின் இப்போராட்டத்தில் பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர்.

போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தின் போது சாலையில் இருந்த பேருந்துகள் தீவைக்கப்பட்டன. ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் பயன்படுத்தியிருந்தனர். காவல்துறையின் இந்தச் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டம் நடந்த போது, அங்கு வந்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். அதேபோல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அந்த வீடியோ தான் தற்போது இனையத்தில் வைரலாகி வருகின்றது

இந்தச் சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் ஜாமியா நூலகத்தில் போலீஸார் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அட்மின் மீடியா ஆதாரம்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback