Breaking News

பாட்னா கல்லூரியில் மாணவிகள் புர்கா அணிந்து வர தடை

அட்மின் மீடியா
0
பாட்னாவில் பெண்கள் கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் புர்கா அணிந்து வர நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறி அணிந்து வருபவர்களுக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாட்னாவில் உள்ள ஜெ.டி., மகளிர் கல்லூரியில் புதிய ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கல்லூர் நிர்வாகி மற்றும் முதல்வர் கையெழுத்திட்ட நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இஸ்லாமிய மாணவிகள் யாரும் கல்லூரி வளாகத்திற்குள் புர்கா  அணியக் கூடாது. இந்த கட்டுப்பாட்டை மீறி புர்கா  அணிபவர்களுக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த புதிய ஆடை கட்டுப்பாட்டை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback