Breaking News

வங்கியின் பாஸ் புக் சம்மந்தமான செய்தியினை ஷேர் செய்யும் முன் இதை படியுங்க

அட்மின் மீடியா
0
NPR, CAA, NRC யை பற்றிய அச்சுறுத்தல் கடந்த சில மாதங்களாக மக்களிடம் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தி உள்ளது. NPR, CAA NRC வை எதிர்த்து டெல்லி முதல் கன்னியாகுமரி வரை வரலாறு காணாத வகையில் பெரும் போராட்டங்கள் மற்றும் அகிம்சை வழியில் மக்கள் புரட்சி ஏற்பட்டுள்ளது.



இதை தொடர்ந்து வலைத்தளத்தில் பரவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. 



என்று ஒரு செய்தியினை பலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றார்கள்

அந்த செய்தி உண்மையா என்று பலரும் கேட்காந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியா களம் கண்டது

 அதாவது மக்கள் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்
எத்ற்க்கு எடுத்தாலும் ஏதாவது ஒன்றோடு ஒன்றை முடிச்சு போடுவதை விடவேண்டும்

வங்கியில் நம் கணக்கு செயல் படவேண்டும் என்றால்  KYC அப்டேட் செய்து கொள்ள வேண்டும்

 kyc என்றால் என்ன என்று முழுமையாக தெரிந்து கொள்ள



வாடிக்கையாளரின் இரண்டு தகவல்களை இந்த கேஒய்சி வைத்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. ஒன்று வாடிக்கையாளரின் அடையாளம், மற்றொன்று வாடிக்கையாளரின் முகவரி. பொதுவாக வாடிக்கையாளரின் அடையாளத்தில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் வாடிக்கையாளரின் முகவரி மாற வாய்ப்பிருக்கிறது. எனவே வங்கிகள் அவ்வப்போது வாடிக்கையாளரின் முகவரியை சரி செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் வாடிக்கையாளரின் பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சரி பார்க்க வேண்டும்.


இதை தான் வங்கிகள் செய்து கொண்டு இருக்கின்றன


உதாரணமாக நீங்கள் வங்கியில் கணக்கு ஆரம்பிக்கும் போது ஒரு முகவரியில் இருப்பீர்கள் அதன்பின்பு நீங்கள் முகவரி மாறிவிட்டீர்கள் அதாவது வேறு இடத்திற்க்கு குடி பெயர்ந்து விட்டீர்கள் ஆனால் உங்கள் வங்கி கணக்கில் பழைய முகவரியே இருக்கும் அதனை சரி செய்வது தான் கே.ஒய்.சி என்பது 

இதற்க்கு முன்பாக ஆதார்கார்டு பான்கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை என்று ஏதாவது ஒன்றை கேட்பார்கள் அவ்வளவு தான்

இதற்க்கும்  NPR, CAA, NRC எந்த வித சம்மந்தமும் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்

இது சம்மதமாக வங்கியை அணுகி கேட்கும்போது அவர்கள் கூறுகையில் கடந்த வருடத்தில் இருந்து யாரெல்லாம் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கை இணைக்கவில்லயோ அவர்களுக்கு Migrations என்று பதிவிட்டு பிறகு அவர்கள் ஆதார் எண்ணுடன் இணைத்த பிறகு Migrations என்பதை மாற்றிவிடுவோம் என்றும், இதை கடந்த வருடங்களில் இருந்தே பின்பற்றி வருவதாகவும் பதில் அளித்தனர்.

எனவே எந்த செய்தியை அவசரப்பட்டு வலைத்தளத்தில் பரப்பி மக்களுக்கு வீணான அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என அட்மின் மீடியா சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

 மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அட்மின் மீடியா ஆப் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள்


https://play.google.com/store/apps/details?id=com.adminmedia.app&hl=en

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback