Breaking News

ரியாத்தில் இன்று மகுட இளவரசரை படுகொலை செய்ய முயற்சி: உண்மை என்ன

அட்மின் மீடியா
0
ரியாத்தில் இன்று-29-12-2019 சவுதி மகுட இளவரசரை படுகொலை செய்ய முயன்றது
என்ற ஒரு  செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள் 

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

இந்த வீடியோ குவைத்தில் 2019 டிசம்பர் 10 முதல் 12 வரை நடைபெற்ற வளைகுடா பாதுகாப்பு மற்றும் விமான கண்காட்சியின் போது நடைபெற்ற ஒரு பாதுகாப்பு ஒத்திகை சமயத்தில் ஒருவர் எடுத்த வீடியோ

உண்மையில் முக்கியமான நபர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதைக் காட்டும் இராணுவ ஒத்திகை அது 

அந்த வீடியோவில் பார்தால் தெரியும் துப்பாக்கி சூடு நடைபெறும் போது  இராணுவ வீரர்கள், பொதுமக்கள் அனைவரும் அமைதியா நின்று வேடிக்கை பார்பதை.

உணமையில் அது போல்  நடந்து இருந்தால்  அங்கே மக்கள் சிதறி ஓடி இருப்பார்கள்

இந்த செய்தி பல அரபு இளவரசர்கள் பெயருடன்  பொய்யாக சமுகவளைதளத்தில் பரப்படுகின்றது.

அட்மின் மிடியா ஆதாரம்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback