Breaking News

ஓடும் பஸ்ஸில் பெண்ணை நாசம் செய்த 6 பேர் - 22ம் தேதி தூக்கு

அட்மின் மீடியா
0
டெல்லியில் கடந்த 16.12.2012-ம் ஆண்டு  மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார்  கைது செய்தனர்.



விசாரணையில் ஆறு பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆறு பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவர் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறைக்குள்  தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மற்ற 4 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர்.  சுப்ரீம் கோர்ட்டு 4 பேரின்  தூக்கு தண்டனையை உறுதிசெய்தது. குற்றவாளிகள் 4 பேருக்கு 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி ஐகோர்ட்டு இன்று அறிவித்து உள்ளது


மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா  மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: முக்கிய அறிவிப்பு

Share this