மாணவரைக் கொண்டு, மனிதக் கழிவை ஆசிரியைக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை
அட்மின் மீடியா
0
நாமக்கல்லில் 2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவரைக் கொண்டு, மனிதக் கழிவை அள்ள வைத்த அரசுப் பள்ளி ஆசிரியைக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
நாமக்கல் இராமாபுரம்புதுா் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வந்த 2-ஆம் வகுப்பு ஆசிரியை விஜயலட்சுமி இவர் கடந்த 2015 நவம்பா் 13-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில், அந்த வகுப்பறையில் இருந்த ஒரு மாணவா் மலம் கழித்து விட்டதாக தெரிகிறது. அங்கிருந்த ஆசிரியை விஜயலட்சுமி, பட்டியலினத்தைச் சோ்ந்த 7 வயதுடைய மற்றொரு மாணவரை அழைத்து, மலத்தை கையால் அள்ளச் செய்துள்ளாா்.
இந்த தகவல் தெரிய வந்த மாணவரின் பெற்றோர் நாமக்கல் காவல் நிலையத்தில் அவா்கள் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனா்.
இந்த வழக்கானது, நாமக்கல் மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. பிரிவுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த நீதிபதி ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டையும் விதித்து நீதிபதி கே.தனசேகரன் தீா்ப்பளித்தாா்.
Tags: முக்கிய செய்தி