கடந்த ஆண்டு 1.34 லட்சம் இந்தியர்கள் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்களா ? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
2018ம் ஆண்டில் 1.34 லட்சம் இந்தியர்கள் வேலையின்மை காரணமாக தற்கொலை என்ற ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி சற்று மிகைபடுத்தி போடபட்டுள்ளது
அப்படியானால் உண்மை என்ன?
அதாவது 2018ம் ஆண்டில் இந்திய அளவில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை தான் 13,4516 ஆகும்.
இதில், இந்திய அளவில் வேலையின்மையால் தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 12,936 மட்டுமே,
இதுதொடர்பாக, NCRB எனப்படும் தேசிய குற்ற ஆவண பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையை படிக்க
http://www.ncrb.gov.in/StatPublications/ADSI/ADSI2018/chapter-2%20suicides.pdf
இந்திய அளவில் தற்கொலை செய்துகொண்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை தவறாக புரிந்துகொண்டு, வேலையின்மையால் இவ்வளவு பேர் தற்கொலை செய்துகொண்டதாக,பல மீடியாக்கள் தலைப்பு போட்டுள்ளனர்.
Tags: மறுப்பு செய்தி