உள்ளாட்சி தேர்தலில் எந்தெந்த பதவிகளுக்கு எந்த நிறத்தில் வாக்குச் சீட்டு தெரியுமா?
அட்மின் மீடியா
0
உள்ளாட்சி தேர்தலில் எந்தெந்த பதவிகளுக்கு எந்த நிறத்தில் வாக்குச் சீட்டு தெரியுமா?
கிராம உள்ளாட்சி தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும். என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நான்கு வகையான பதவியிடங்களுக்கு ஒரே நேரத்தில் வாக்குப் பதிவு நடைபெறவிருப்பதால் அவற்றை வேறுபடுத்திக் காட்ட வெவ்வேறு நிறங்களில் வாக்குச்சீட்டிகள் தயாராகி உள்ளன.
கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு வெள்ளை நிறத்திலும்,
கிராம ஊராட்சித் தலைவா் தோ்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும்,
ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு பச்சை நிறுத்திலும்,
மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
இரண்டு கிராம ஊராட்சி வாா்டுகளுக்கு பொதுவாக ஒரே வாக்குச் சாவடி அமைக்கப்பட்டால்,
ஒரு வாா்டுக்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வாா்டுக்கு இளநீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும் என்று மாநில தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது
Tags: முக்கிய செய்தி