Breaking News

அயோத்தி வழக்கில் தாக்கல் செய்யபட்டஅனைத்து சீராய்வு மனுக்களும் தள்ளுபடி

அட்மின் மீடியா
0
அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது


உ.பி.,யில் அயோத்தியில் உள்ள பாபர்மசூதி இடிப்பு  தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு,கடந்த  நவ., 9ம் தேதி தீர்ப்பு அளித்தது

 தீர்ப்பில்; 'சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமருக்கு கோவில் கட்டலாம். மசூதி கட்டுவதற்காக, அயோத்தியின் முக்கிய இடத்தில் முஸ்லிம்களுக்கு, 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தார்கள்


இந்த தீர்ப்பை எதிர்த்து, வழக்கில் முன்பு சம்பந்தப்பட்டவர்களால் 9 சீராய்வு மனுக்களும், புதியவர்களால் 9 சீராய்வு மனுக்களுமாக மொத்தம் 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணையை, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி பாப்டே தலைமையில், நீதிபதிகள் சந்திரசூட், அசோக் பூஷண், நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று விசாரித்தது. இதில், தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா  மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback