Breaking News

3 நம்பர் லாட்டரியால் கடன் 3 குழந்தைகளோடு தம்பதி தற்கொலை..

அட்மின் மீடியா
1
விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரிக்கு அடிமையானதால் ஏற்பட்ட கடன் காரணமாக, 3 குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்து குடும்பதோடு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.





 தற்கொலைக்கு முன் தனது முடிவுக்கு என்ன காரணம் என விளக்கும் வீடியோ ஒன்றையும் அந்த இளைஞர் வெளியிட்டிருக்கிறார்.

விழுப்புரம் முத்தோப்பு சலாமத் நகரைச் சேர்ந்த அருண் என்பவர் வீட்டிலேயே சொந்தமாக பட்டரை வைத்துக்கொண்டு நகை செய்யும் தொழில் செய்து வந்தார்.

 இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், பிரியதர்ஷினி, யுவஸ்ரீ மற்றும் 4 மாதமே ஆன பாரதி ஆகிய 3 பெண் குழந்தை இருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு வாட்ஸ் அப் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், அதில் 3 குழந்தைகளையும் தன் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சயனைட் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் தன் மனைவியும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார்.


மேலும் மூணு நம்பர் லாட்டரியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நகைத்தொழிலும் கை கொடுக்கவில்லை என்றும் பதிவிட்டு, அந்த வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பி விட்டு, அருணும், அவரது மனைவியும் சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவலறிந்து வந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டை உடைத்து பார்த்த போது சோபா மற்றும் தரையில் அனைவரும் கிடந்துள்ளனர்.

 பின்னர், அனைவரையும் தூக்கி கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 





அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே 5 பேரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் டிஎஸ்பி சங்கர் தலைமையிலான போலீசார் அந்த வீட்டின் உள்ளே சென்று பார்வையிட்டு சோதனை செய்தனர்.

 அப்போது குழந்தைகளுக்கு சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு, பின்னர் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனை அடுத்து அங்கிருந்த மது பாட்டில் மற்றும் அவருடைய, மொபைலை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். 

3 நெம்பர் லாட்டரியால் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்த சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா  மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: முக்கிய செய்தி

Share this

1 Comments

  1. பைத்தியக்காரன் சாவதற்கு துணிந்த உனக்கு வாழ தைரியம் இல்லாமல் போனதேன்

    ReplyDelete