வாட்ஸ்ஆப்பில் மூன்று புளூ டிக் வந்தால் அரசாங்கம் பார்த்துவிட்டதா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக வாட்ஸ்ஆப்பில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தியில் இந்த வாட்ஸ்ஆப் புதிய மாற்றங்களின் படி அரசாங்கம் நாம் அனுப்பும் செய்திகளை கண்காணிக்க இருப்பதாகவும் நாம் அனுப்பும் செய்திகளில் மூன்று புளூ டிக் வரும் பட்சத்தில் அதகை அரசு நிறுவனம் கண்காணித்து இருக்கும் எனக் கூறப்பட்டது. பின்பு இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு சிவப்பு நிற டிக் வரும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அது போல் எந்த வித அறிவிப்பும் வாட்ஸப் நிறுவனம் அறிவிக்கவில்லை மேலும் மத்திய அரசும் அறிவிக்கவில்லை
எனவே பொய்யான போலி செய்திகளை பரப்பாதீர்கள்.
Tags: மறுப்பு செய்தி