தமிழர் பாரம்பரியம் போற்றும் கீழடியில் அருங்காட்சியகம்: முதல்வர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கீழடி
ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு
ரூ.
12.21 கோடி
செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்' என
தமிழ்நாடு நாள்
விழாவில் பேசிய
முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சிந்து, கங்கை நதிக்கரை
நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை
என்ற கருத்துக்கு
மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள்
கீழடி அகழாய்வில்
கிடைத்துள்ளன.வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள
வரலாற்ற சிறப்புமிக்க
கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய
அளவில் நடைபெற்ற
அகழாய்வாகும்.இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில்
சங்ககால மக்களின்
தொல் எச்சங்கள்
அதிகளவில் கிடைத்துள்ளன.சங்க இலக்கியப் பாடல்களில்
காணப்படும் பொருட்கள்
அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று
ஆய்வாளா்களும், சங்கத்தமிழ்
ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.
சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பே
கீழடியில் கட்டட
சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
மேலும் கிணறு அமைப்பு, குழாய் மூலம் தண்ணீர்
எடுத்து வருவது, கொண்டு செல்வது போன்றவை எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இன்னும் உங்கள்
வியப்பை அதிகரிக்கும் அக்கால
மக்கள்
பயன்படுத்திய சுடுமண் முத்திரை கட்டைகள் (இரப்பா் ஸ்டாம்ப்), எழுத்தாணிகள், அம்புகள் , இரும்பு, செம்பு
ஆயுதங்கள், அரிய
வகை
அணிகலன்கள், என
5000க்கும்
மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. “அரிக்கன்மேடு, காவிரி
பூம்பட்டிணம், உறையூா் போன்ற
அகழாய்வில் கிடைத்ததைவிட அதிக
எண்ணிக்கையில் தொடா்ச்சியாக பல
கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
சங்ககாலத்தில் கட்டிடங்களே இல்லை
என்ற
கூற்றை
இந்த
அகழாய்வு மாற்றியமைத்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்கள் மூலம்
ஒரு
நகர
நாகரீகம் இருந்ததற்கான அத்தனை
அடிப்படை ஆதாரங்களும் கிடைத்துள்ளன.தமிழகத்தில் இதுவரை
நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் சுடுமண் முத்திரை கிடைத்தது இதுவே
முதல்முறையாகும்
இப்படி தமிழர் நாகரீகத்தை உலகிற்கே பறை
சாற்றிய கீழடியில் தமிழக
அரசு
அருங்காட்சியம் கட்ட
முடிவெடுத்துள்ளதை அட்மின் மீடியா
பாராட்டுகிறது
Tags: முக்கிய செய்தி