Breaking News

சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை- உச்சநீதிமன்றம்

அட்மின் மீடியா
0
சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போதைய சூழலில் சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் வழிபட தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.



சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் நுழைய காலம்காலமாக தடை விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு சபரிமலையில் அனைத்து பெண்களும் நுழையலாம் என கடந்த 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மறு சீராய்வு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியானது அதில்  உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் பாப்டே தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாக தீர்ப்பளித்தது. அதே நேரம் சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் நுழைய தடை இல்லை என்றும் அந்த அமர்வு தெரிவித்தது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback