Breaking News

அயோத்தி வழக்கில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு விரைவில் தாக்கல் முஸ்லீம் சட்ட வாரியிம் முடிவு

அட்மின் மீடியா
0
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.



அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு  நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த நவ.,9ம் தேதி தீர்ப்பளித்தது. 

அத்தீர்ப்பில் அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும். கோவில் கட்ட அறக்கட்டளை ஒன்றை மூன்று மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும்' , மேலும், மசூதி கட்டுவதற்காக வேறு இடத்தில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் 5 ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.


இந்த வழக்கு தொடர்பாக மறுசீராய்வு மனு அளிக்க இருப்பதாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் இன்று  அறிவித்துள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback